Wednesday, June 17, 2009

ஹைக்கூ

ரசித்து பார்த்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை.

கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு.

குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்.

Tuesday, June 16, 2009

ஊக்கம்

அலைகள் ஓய்வெடுத்தால்
அழகில்லை கடலுக்கு.
இதயம் ஓய்வெடுத்தால்
சுவாசம் இல்லை உடலுக்கு.
சூரியன் ஓய்வெடுத்தால்
விடிவில்லை பூமிக்கு.
தோழனே வா...
எறும்பாய் உழைப்போம்,
கோபுரமாய் உயர்வோம்...


பள்ளிக்கூடம் கோவில்தான்
படிப்பவர்களுக்கு
தோல்விகூட வெற்றிதான்
சாதிப்பவர்களுக்கு
சத்தங்கள்கூட சங்கீதம்தான்
கலைஞர்களுக்கு
முயற்சிகூட மூலதனம்தான்
உழைப்பவர்களுக்கு
வாழ்க்கை முழுவதும் வசந்தம்தான்
வாழத் தெரிந்தவர்களுக்கு


இருபத்தி எட்டு சனி இன்று
இமயத்தை எட்டும் தினம் என்று
இதயத்தை எட்டும் உறுதி கொள்!
பதனிட்ட எண்ணம் பயிர் விட்டு முளைத்து
உலகுக்கு உன்னை உயர்வென்று காட்டும்!!
திறன் மிக்க மனிதன் நீ என்று உலகம்
உன் தோளில் மலர்மாலை சூட்டும்!


ரோகிணி நட்சத்திரத்தில்
பிறந்த குழந்தை,
தாய்மாமனைக் கொல்லும்
என்று புலம்பும்
அறிவிலிகளே! அவன்,
கண்ணன் போல் கீதை சொல்வான்
என்று மகிழ மாட்டீரா?


மரத்தில் ஏறுகிறபோதே
கிளை ஒடியுமென்று
துவண்டு போனால்
உச்சியை அடைய முடியுமா...?
கல்லும் உளியும்
உன்னிடமிருந்தும்
முடியுமா என்று யோசித்தால்
சிலை வடிக்க இயலமா...?
கூர்மையான பார்வை
நெஞ்சிலே வைராக்கியம்
உலகம் உன்வசமாகுமே!