Tuesday, December 29, 2009

*"நம்பிக்கை விற்பவன்" *

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாத இடத்தில்
தன் சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,

பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,

"இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,

தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:

"உன் பெருமை உனக்குப் புரியலை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!"

நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.

இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;

உனக்கு சாப்பாடு போடுவதில்
சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா"

வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிளிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:

"ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!"

Tuesday, December 15, 2009

நீ வீரனா கோழையா??????

எதுவுமே தெரியாது என்கிறான் கோழை
எல்லாம் தெரியும் என்கிறான் வீரன்

எப்படி சாத்தியம் என்கிறான் கோழை
ஏன் சாத்தியம் இல்லை என்கிறான் வீரன்

எப்படியும் முடியாது என்கிறான் கோழை
எப்படியாவது முடிப்பேன் என்கிறான் வீரன்

இவற்றையெல்லாம் பார்த்து எதுவும் பேசாமல் கவனித்து கற்றுகொண்டான் புத்திசாலி ........

நண்பா வீரனாகவோ கோழையாகவோ இருந்து விடாதே அதற்கு மேல் ஒன்று உள்ளது என்பதை புரிந்துகொள் வெளியில் கட்டாதே ..........

Thursday, December 10, 2009

குழந்தையும் மரணமும்...

இழக்க முடியாத சொர்க்கமும் நீதான்
இருக்க முடியாத நரகமும் நீதான்
விலக முடியாத சொந்தமும் நீதான்
விளக்க முடியாத பந்தமும் நீதான்
வரவேற்க முடியாத வறட்சியும் நீதான்
விரட்ட முடியாத வசந்தமும் நீதான்
கொடுக்க முடியாத அரியப் பொருளும் நீதான்
கூறவே முடியாத அறியாப் பொருளும் நீதான்
திரட்ட முடியாத பெருஞ் செல்வமும் நீதான்
திரும்ப முடியாத திருப்புமுனையும் நீதான்
தடுக்க முடியாத அட்சயமும் நீதான்
தாங்க முடியாத ஆச்சர்யமும் நீதான்
புரிய முடியாத வனாந்திரமும் நீதான்
புரிந்தும் முடியாத சூத்திரமும் நீதான்
திரிக்க முடியாத உண்மையும் நீதான்
தரிக்க முடியாத பொய்யும் நீதான்
விடிந்தும் முடியாத இரவும் நீதான்
விரதம் முடியாத பகலும் நீதான்
தவழ முடியாத குழந்தையும் நீதான்
தவிர்க்க முடியாத மரணமும் நீதான்...!

பைந்தமிழ் கிறுக்கல்கள்

ஆசை !!!
“தேவைகள்”எனத்
திருத்தப்பட வேண்டிய
மொழிப் பிசகல்.

கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.

மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.

அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.

நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.

கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.

கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...

புன்னகை !!!
நிர்வாணப் பால்...

மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....

வாழ்க்கை !!!
பயணம்...

பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...

ஜனனம் !!!
வரம் சாபமாய்...

மரணம் !!!
சாபம் வரமாய்...

புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...

பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிழவி...

காற்று !!!
இறைவனின்
மந்திரம்...

கவிதை !!!
மொழியின்
குழந்தை...

காதலி !!!
காதலன்
குழந்தை...

நான் !!!
அடுத்த
நொடியின்
இறந்தகாலம்....

நீ !!!
இந்த
நொடியின் எதிர்காலம்...

அன்பெனும் உணர்வு!

உன்னை நான்
'அம்மா' என்று
அழைக்கட்டுமா?
நீ என்
அன்னையாகவே
என்னுள் வாழ்கிறாய்!
உன்னைக் காதலிப்பதற்கான
காரணம் என்னவென்று
கேட்டாய் நீ!
காரணமின்றி
வருவது காதல்
என்றேன்!
உண்மைதான்!
காரணகாரியங்கட்டும்
பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டது
அன்பெனும் உணர்வு!!

வாழ்க்கை என்பது...

வாழ்க்கை என்னவென்று...
கேள்வியோடு அலைந்திருந்தேன்..
எதிர்வந்த மனிதரெல்லாம்..
பதிலாய் ஒன்றை சொல்லி போனார்கள்..

வாழ்க்கை என்பது...
ரோஜாப்பூவை போன்றது...
காதலித்துக் கொண்டிருப்பவன்
சொல்லி போனான்..

வாழ்க்கை என்பது...
இதழ்களை இழந்த
ரோஜாவை போன்றது..
முட்கள் மட்டுமே மிஞ்சும்..
காதலித்து தோற்றவன்
சொல்லி போனான்..

வாழ்க்கை என்பது...
வென்று காட்டுவது..
முதலாளி ஒருவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
வென்றாலும் தோற்பது..
தொழிலாளி ஒருவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
உண்மை உணர்வது...
இல்லறம் வெறுத்தவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
உன்னை உணர்வது...
இறைவனை வெறுத்தவன்
சொல்லி போனான்...

வாழ்க்கை என்பது...
கானல் நீர் போன்றது...
கவிஞன் ஒருவன்
சொல்லி போனான்..

வாழ்க்கை என்பது...
மரணத்தை நோக்கிய ஓட்டபந்தயம்...
சிப்பாய் ஒருவன்
சொல்லி போனான்...

அத்தனை பதில்களையும்...
சுமந்து திரிகையில்..
நொடிகள் நிமிடங்களாகி...
நிமிடங்கள் மணிகளாகி...
பின் வருடங்களும் கடந்திருக்கும்...

வாழ்க்கை என்பது...
வாழ்வது மட்டும்தான்..
உணரும் தருணத்தில்..
வாழ்க்கையும் முடிந்திருக்கும்.

முயற்சிகளின் தோற்ப்பு....

முயற்சிகள் தோற்பதில்லை தான்
ஒரு சில வேளைகளில்
.
.
முயற்சிகளின் தோற்ப்பு
நல்லது தான்...
.
.
கரை சேர துடிக்கும் அலைகளின் முயற்சி...
உலகை விட்டு விலகும் நிலவின் முயற்சி..
அணையினை கடக்க நினைக்கும் வெள்ளத்தின் முயற்சி...
பூமியை முத்தமிட முயலும் மலைகளின் முயற்சி....
.
.
நல்லது நடக்கும் எனில்
உலகம் நிலைக்கும் எனில்
.
.
இதன் முயற்சிகள் தோற்க்கட்டும்.....

Wednesday, October 14, 2009

ஊக்கம்

துன்பத்தில்!
"வாழ்ந்து தான் ஆக வேண்டும்"
என்று வாழ்ந்து கொண்டே வீழாமல்,
"ஒரு நாள் வெல்வதர்க்க்குத்தான் வாழ்கிறோம்"
என்று வாழ்ந்து பார்...
"வாழ வேண்டும்" என்ற எண்ணம் வரும்..

துன்பத்தில்!
கழன்று வரும் கண்ணீர் துளியை
தோல்வியின் வேட்கையாய் கருதாமல்
முயற்சியின் தாக நீராய் கருது!
அழுவதிலும் ஓர் இன்பம் காண முடியும்..

இலக்குகள், லட்சியங்கள்
காதல்,கடமை என வகை அறிந்து
மனதில் ஓர் தனி தனி அறையில் பூட்டி வை..
முக்கியத்தின் ஏர்ப்ப விடுதலை செய்து
வெற்றி பெற உழை...

குட்டி தேவதை

அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது

கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.

"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..

நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"

தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"

கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"

தேவதை சொன்னது

"இறைவா..!!

நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;


நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;


நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;


நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;


நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;


நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."

கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.

"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."

தேவதை சொன்னது

"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"

கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.

"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "

தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.

கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.

இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.

கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"

என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."

தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "

தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.

தோல்வி வெற்றியின் வித்து

தோல்வி வெற்றியின் வித்து
தவழும் குழந்தை யார் துணையன்றி
எழுந்து நிற்க போராடும்... பலமுறை தோற்ற பின்பும்!!
கிணற்று தவளை !! இரண்டடி மேலே !! ஓரடி கீழே !!
தெரிந்தபின்பும் தொடர் முயற்சி !!
ஆமைக்கு தெரியாதா முயலின் வேகம்?
எப்படி வந்தது தானும் வெல்வோம் என்ற அந்த துணிச்சல்!!
கஜினிக்கு யாருரைதது ஜோதிடம்
அவன் பதினேழாம் முறை வெல்வான் என்று
போராடு தோழா!! நீ இறுதிவரை!!
காலம் காலமாய் நீ எடுத்து வந்த முயற்சியை
இன்று நீ கைவிடாதே
நாளை நீ வெல்வாய் என்ற உண்மை நீ அறியாமல்!!